Home கனடா மானிடோபாவில் முகக் கவசங்கள் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

மானிடோபாவில் முகக் கவசங்கள் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

by Jey

மானிடோபாவில் முகக் கவசங்கள் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக அனைத்து அரச பணியாளர்களும் இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் அடிக்கடி கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் நான்காம் அலை ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வரும் நிலையில் இந்த புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றப்படாத இளம் தலைமுறையினரையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts