எயார் கனடா விமான சேவை நிறுவனம் தனது அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதனை கட்டாயமாக்கியுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்திற்குள் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொள்ளத் தவறும் பணியாளர்கள் பணி நீக்கப்படுவர்கள் அல்லது சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பணிகளில் ஈடுபடுவோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டுமென அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எயார் கனடா நிறுவனம், புதிய பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டுமென்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.