‘நாட்டில் கோவிட் பரவல் கவலையளிக்கும் விதத்தில் உள்ள நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு தவீரம் காட்டுகிறது,” என, ராகுல் விமர்சித்துள்ளார்.
அரசின் சொத்துகளின் மூலம் பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததில் இருந்து, இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், ‘‛தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துக்களை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது,” என, ராகுல் விமரிசித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‛அதிகரித்துவரும் கோவிட் பரவல் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அடுத்த அலையில் தீவிரமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சொத்துக்களை விற்பதில் அரசு மும்முரம் காட்டிவருகிறது,” எனப் பதிவிட்டுள்ளார்.