இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களில் 15.8% அளவான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாளுக்கு நாள் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.