தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு 30ம் திகதிக்குப் பின்னரும் நடைமுறையில் இருக்காது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டை முடக்கியதால் வெற்றி எதனையும் காணவில்லை என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்குவதால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை திறந்து வைத்தே கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இலங்கையில் பல தரப்பினரின் அழுத்தம் காரணமாகவே நாடு முடக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தற்போது அமுல்லி உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்ற முடிவு நாளை அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாளைய தினம் கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.