Home உலகம் சுவிஸ் விமான சேவை நிறுவன பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி

சுவிஸ் விமான சேவை நிறுவன பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி

by Jey

அனைத்து சுவிஸ் சர்வதேச விமான நிறுவனப் பணியாளர்களுக்கும் நவம்பர் 15 முதல் கொவிட் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த கட்டாய தடுப்பூசி நடவடிக்கை இல்லாமல் உலகம் முழுவதும் தனது விமானசேவை நடவடிக்கைகளை தொடர இயலாது என்று விமான நிறுவனம் கூறுகிறது. உதாரணமாக, ஹாங்காங் ஏற்கனவே சில இடங்களிலிருந்து வரும் விமான குழுவினருக்கு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் கோருகிறது.

சில இடங்கள் மற்றும் பகுதிகளுக்கு இனி விமான சேவையில் ஈடுபட முடியாது, இது ஸ்விஸ் ஹப் அமைப்பின் செயல்திறனை தீவிரமாக குறைக்கும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது விமானிகள் மற்றும் பிற கேபின் குழுவினரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இதுவே சிறந்த வழியாகும் என்று விமான நிறுவனம் நம்புகிறது.

அவுஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ் மற்றும் சில அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே விமான ஊழியர்களுக்கு தடுப்பூசி போட வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்த முதல் ஐரோப்பிய விமான நிறுவனம் SWISS ஆகும்.

இந்த நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. நிச்சயமாக, தடுப்பூசிகள் தன்னார்வமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பியிருப்போம் என்று விமான உதவியாளர் யூனியன் கேப்பர்ஸ் கூறினார்.

தடுப்பூசி கொள்கை அடிப்படையில் தன்னார்வமாக இருக்க வேண்டும், ஆனால் SWISS இல் கட்டாய தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது சரியானது மற்றும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் நம்பத்தகுந்தது என்று நாங்கள் கருதுகிறோம். காக்பிட்டில் கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது என்று விமானிகளின் தொழிற்சங்கமான Aeropers கூறியுள்ளது.

related posts