ஆப்கன் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது: ஆப்கன் மக்களின் உணர்வுகளையும் சுதந்திரத்தையும் சீனா மதிக்கிறது. அந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் சீனா உறுதியுடன் உள்ளது.
தலிபான்களுடன் முதல்முறையாக சீனா தூதரகத் தொடர்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடன் எந்தவித தடையுமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இரு தரப்பிலும் தகவல்களும் ஆலோசனைகளும் பரிமாறி வருகிறோம். முக்கியமான விவகாரங்களில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு காபூல் நகரம் முக்கிய தளமாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.