ரிச்மன்ட்ஹில்லில் 17 வயதான சிறுவன் ஒருவன் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ரிச்மன்ட்ஹில் ரெஸ்டுரன்ட் ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இரவு 8.00 மணியளவில் தாக்குதல் இம்பெற்றுள்ளதாக நோர்த் யோர்க் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தி குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.