Home கனடா தடுப்பூசி சான்றிதழ் முறைமை குறித்து அறிவிக்கப்பட உள்ளது

தடுப்பூசி சான்றிதழ் முறைமை குறித்து அறிவிக்கப்பட உள்ளது

by Jey

தடுப்பூசி சான்றிதழ் முறைமை குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக ஒன்றாரியோ அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் இந்த விடயம் பற்றி அறிவிக்க உள்ளார்.

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு எவ்வாறு சான்றிதழ் வழங்குவது என்பது குறித்த முறைமையை போர்ட் விளக்க உள்ளார்.

ஒன்றாரியோவை மையமாகக் கொண்ட கோவிட் சான்றிதழ் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

திரையரங்குகள், ரெஸ்டுரன்ட்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற இடங்களுக்கு செல்வோருக்கு இந்த தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிப்பு அவசியமாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

யோர்க், கியூபெக் போன்ற சில பகுதிகளில் ஏற்கனவே இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts