Home இலங்கை செப்டம்பர் வரையில் முடக்கம் நீடித்தால் 7500 உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்

செப்டம்பர் வரையில் முடக்கம் நீடித்தால் 7500 உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்

by Jey

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முறையாக செப்டம்பர் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டால் ஏழு ஆயிரத்து 500 கொரோனா மரணங்களை தடுக்கக்கூடியதாக இருக்கும் – என்று இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

அத்துடன், ஒக்டோபர் 03 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடர்ந்தால் 10 ஆயிரம் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு தற்போது முடக்கப்பட்டிருந்தாலும் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதை காணமுடிகின்றது. இந்நிலைமை தொடருமானால் மீண்டும், மீண்டும் நாட்டை மூடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டில் இருந்து ஒருவர் அதுவும் 60 வயதுக்கு குறைவான – நாட்பட்ட நோயினால் பாதிக்கப்படாத ஒருவர் வந்து, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடு சென்றால் பரவாயில்லை.” – எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

related posts