ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அச்சத்தையும் பீதியையும் உண்டுபண்ணும் பல புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இதற்கிடையில், மனதில் மகிழ்ச்சியையும் உதட்டில் புன்னகையையும் கொண்டு வரும் ஒரு புகைப்படம் உலக அளவில் வைரல் ஆகி வருகிறது.
மீட்கப்பட்ட ஒரு ஆப்கான் குடும்பத்தின் நிம்மதியை நெட்டிசன்கள் மகிழ்ச்சியுடன் இணையத்தில் ண்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் ஆப்கான் குடும்பம் ஒன்று, ஒரு விமான நிலையத்தில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. அந்த குடும்பத்தின் சிறிய பெண், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நிம்மதியாக குதித்துக் கொண்டு செல்வதையும் இதில் காண முடிகிறது.
ஆப்கானிஸ்தானின் காபூல் (Kabul) விமான நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளிவந்த அச்சத்தை அதிகரிக்கும் பல படங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு, இந்த குடும்பத்தின் புகைப்படம், நம்பிக்கையூட்டும் ஒரு படமாக உள்ளது.
இதயத்தை உருக்கும் இந்த படத்தை, முன்னாள் பெல்ஜிய பிரதமர் கை வெர்ஹோஃப்ஸ்டாட் ட்விட்டரில் பகிர்ந்து, அந்த ஆப்கான் (Afghanistan) குடும்பத்தை பெல்ஜியத்திற்கு வரவேற்றார்.
“நீங்கள் அகதிகளைக் காப்பாற்றினால் இப்படிதான் நடக்கும் … சிறு பெண்ணே, பெல்ஜியத்திற்கு வரவேற்கிறோம்!” என்று அவர் எழுதியுள்ளார். மேலும் இந்த அற்புதமாக புகைப்படத்துக்காக அவர் ராய்ட்டர்சை பாராட்டியுள்ளார்.