இடோபிகோக்கில் இடி மின்னல், கடும் புயல் காற்றுடன் கடுமையான மழை பெய்துள்ளது.
இடோபிகோக்கின் மேற்கு பகுதியில் நேற்றிரவு கடுமையான மழை பெய்துள்ளது.
புயல் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் இருபதாயிரம் பயனர்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாக 4000 பயனர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை சீர்கேட்டினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் பெரும் எண்ணிக்கையில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக றொரன்டோ தீயனைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
வெள்ளம், மரம் முறிந்து வீழ்தல், மின்சார இணைப்பு துண்டிப்பு என பல்வேறு விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.