மொரோக்கோவிற்கான விமானப் பயணங்களை இடைநிறுத்துவதாக கனடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த இடைநிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளது.
மொரோக்கோவிற்கும் கனடாவிற்கும் இடையிலான அனைத்து நேரடி விமான சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 30 நாட்களுக்கு இந்த விமான சேவை இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் எனவும் நிலைமைகளை கவனத்திற் கொண்டு இந்த இடைநிறுத்தத்தை நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறும் நாடுகள் வழியாக மொரோக்கோவிலிருந்து கனடா வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை சான்றிதழ் அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.