கனடாவில் ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு காணப்பட்ட ஆதரவில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதுவரை காலமும் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என Nanos Research கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், Nanos Research கருத்துக் கணிப்பு முடிவுகளின் பிரகாரம் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 33 வீதமான ஆதரவும் லிபரல் கட்சிக்கு 30 வீதமான ஆதரவுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் லிபரல் கட்சிக்கான ஆதரவு இரண்டு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஆய்வு நிறுவனத்தின் ஸ்தாபகர் Nik Nanos தெரிவித்துள்ளார்.