உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; சில பகுதிகளில் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
‘ஜூம்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள் சேற்றில் புதைந்தன. இந்த சம்பவங்களில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். அதில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் மாயமானவர்களை தேடும் பணியை மாநில பேரிடர் மீட்பு படை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன’ என, முதல்வர் புஷ்கர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.