சுவிஸ் குடியிருப்பாளர்களில் கால் பங்கினர் வெளிநாட்டவர்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் சுவிஸ் குடியுரிமை பெறுகின்றனர்?
சுவிஸ் குடியுரிமை வழங்கும் செயல்முறையானது, வெளிநாடுகளிலிருந்து சுவிஸ் வருபவர்களுக்கும், சுவிட்சர்லாந்தில் உள்ள வெளிநாட்டு பெற்றோருக்கு பிறந்தவர்களுக்கும் பொருந்தும்.
சுவிட்சர்லாந்தில், குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு குடிமக்களின் குடியுரிமை விகிதம் இரண்டு சதவிகிதம் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் பிறந்தவர்களை விட சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களுக்கு இந்த விகிதம் இரண்டு மடங்கு அதிகம்.
கடைசியாக இந்த புள்ளிவிபரங்கள் பெறப்பட்ட 2019 ஆம் ஆண்டில், சுமார் 41,000 வெளிநாட்டவர்கள் தங்கள் சுவிஸ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றனர். இந்த எண்ணிக்கை 2017 (45,000) மற்றும் 2018 (42,5000) ஐ விட சற்று குறைவானதாகும்.
ஒட்டுமொத்தமாக, கடந்த தசாப்தத்தில் குடியேறியவர்களிடையே குடியுரிமை விகிதம் சீராக உள்ளதாக FSO தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவிட்சர்லாந்தில் பிறந்த மக்களிடையே இது 0.5 சதவிகிதம் சிறிய அதிகரிப்பை காண்பிக்கிறது.
வேறு சில நாடுகளைப் போலல்லாமல், சுவிட்சர்லாந்தில் பிறந்த ஒருவரின் பெற்றோர் வெளிநாட்டில் பிறந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருந்தால், அவர் சுவிசில் பிறந்ததற்காக இயல்பாகவே சுவிஸ் குடியுரிமை பெற்றவர் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
கடந்த தசாப்தத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டதா?
குடியுரிமை பெற்ற மக்களின் பிறந்த நாடுகளைக் கொண்டு இந்த மாற்றங்கள் அதிகம் உணரப்படுகின்றன.
கீழே உள்ள விளக்கப்படம் காண்பிப்பது போல், தசாப்தத்தின் தொடக்கத்தில், பெரும்பாலானவர்கள் இத்தாலி மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து வந்தவர்கள். சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள்.
2019 ஆம் ஆண்டில், ஜேர்மனியர்களின் சதவீதம் அதிவேகமாக வளர்ந்தது, சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று குடியேறியவர்களின் மிகப்பெரிய குழுவாக மாறியது.
2000 ஆம் ஆண்டை விட 2019 இல் குறைவான இத்தாலியர்களே குடியுரிமை பெற்றனர். போர்த்துகீசியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்தது, மேலும் பிரான்சில் இருந்து வந்த அதிகமான மக்களும் சுவிஸ் குடியுரிமை பெற்றனர்.
சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்கள் பெரும்பாலும் எங்கே குடியமர்கிறார்கள்?
அதிக விகிதங்கள் Geneva, Zurich, Zug, Vaud ஆகிய கன்டோன்களில் பதிவாகியுள்ளன. அங்கு தற்செயலோ அல்லவோ, மிகப்பெரிய சர்வதேச குடியிருப்பாளர்களின் விகிதம் பதிவாகியுள்ளது.
Nidwalden, Appenzell Innerrhoden, Obwalden ஆகியவற்றில் குறைவான கடவுச்சீட்டுக்களே வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குடியுரிமை பெற்றவர்களில், 19 சதவிகிதமானேர், அதாவது சுவிட்சர்லாந்தின் 8.6 மில்லியன் சனத்தொகையில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் – இரட்டை குடியுரிமை கொண்டவர்கள்.
இதன் பொருள் அவர்கள் பிறந்த இடத்தின் குடியுரிமையை வைத்துக்கொண்டே சுவிஸ் குடியுரிமையையும் பெற்றுள்ளவர்கள். இவர்களின் பிறந்த நாடும் சுவிட்சர்லாந்தும் இந்த மக்களை தங்கள் குடிமக்களாகக் கருதுகின்றன, அவர்களை வெளிநாட்டவர்களாகக் கருதுவதில்லை.