Home உலகம் தலிபான்களை தாக்குதல்களை முறியடித்ததாக அமெரிக்கா அறிவிப்பு

தலிபான்களை தாக்குதல்களை முறியடித்ததாக அமெரிக்கா அறிவிப்பு

by Jey

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பல ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், அவை அனைத்தும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை உறுதி செய்த வெள்ளை மாளிகை, விமான நிலையத்தில் இடம்பெறும் வெளியேற்றல் நடவடிக்கைகளுக்கு இடையூறு இல்லை என்று கூறியது, காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தை குறிவைத்து திங்கட்கிழமை காலை நடந்த சமீபத்திய ராக்கெட் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கு விளக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களை, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரொக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை என்ற போதிலும், ஐஎஸ்.ஐஎஸ்-கே மூலம் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு செயற்படும் சத்தம் கேட்டதாகவும், விமான நிலையத்திற்கு அருகில் புகை எழும்புவதை காணமுடிந்ததாகவும் தெரிவித்தனர்.

நாளையுடன் அமெரிக்க துருப்புக்கள், ஆப்கானிலிருந்து வெளியேற இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடத்தியது.

கடந்த வாரம் வியாழக்கிழமை, ஐஎஸ்ஐஎஸ் கே என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இரட்டை தற்கொலை குண்டுதாக்குதல்களில் 13 அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உட்பட 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறைந்தது 200 பேர் காயமடைந்தனர்.

விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி சி-ரேம் பாதுகாப்பு அமைப்பு, உள்வரும் தாக்குதல்களைக் கண்டறிந்து, ஒரு இயந்திர துப்பாக்கியைப் பயன்படுத்தி உள்வரும் நெருப்பை அதன் இலக்கை அடையும் முன் அழிக்கிறது. இந்த அமைப்பு ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க படைகளை குறிவைத்து உள்வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க பயன்படுத்தப்படுகிறது.

related posts