Home கனடா மானிடோபா முதல்வர் பதவி விலகுவதாக அறிவிப்பு

மானிடோபா முதல்வர் பதவி விலகுவதாக அறிவிப்பு

by Jey

மானிடோபா மாகாணத்தின் முதல்வர் பிறயன் பாலிஸ்டர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை முதல் பதவியை தாம் ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலிஸ்டர் ஏற்கனவே தனது பதவி விலகல் குறித்து ஓரு மாதத்திற்கு முன்னதாகவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமப் பதவி குறித்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தலைமைப் பதவிக்காக போட்டியிடுகின்றார்கள்.

2012ம் ஆண்டில் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பாலிஸ்டர் 2016ம் ஆண்டில் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

தலைமைத்துவ பதவிக்கான வாக்கெடுப்பின் போது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

related posts