கனடாவில், இறைச்சி மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று நிலைமை மற்றும் காலநிலை மாற்றம் என்பனவற்றினால் நாட்டில் மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்வடையக் கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
எல்லா உணவுப்பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாவிட்டாலும் ஒரு சில மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாட்டு இறைச்சியின் விலை ஏற்கனவே 10 வீதமாக உயர்வடைந்துள்ளதுடன் பன்றி இறைச்சியின் விலை 5 வீதமாக உயர்வடைந்துள்ளது.