Home கனடா 5000 ஆப்கான் பிரஜைகளை குடியேற்ற கனடா இணக்கம்

5000 ஆப்கான் பிரஜைகளை குடியேற்ற கனடா இணக்கம்

by Jey

அமெரிக்கப் படையினரால் மீட்கப்பட்ட சுமார் ஐயாயிரம் ஆப்கானிஸ்தான் பிரஜைகளை குடியேற்றுவதற்கு கனேடிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர்  அங்கிருந்து அழைத்து வரப்படும் சுமார் ஐயாயிரம் ஆப்கான் பிரஜைகளுக்கு அடைக்கலம் வழங்க கனடா இணங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பிரஜைகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு கனடா இரவு பகல் பாராது உழைத்து வருவதாக குடிவரவு அமைச்சர்  Marco Mendicino தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய படையினர் இதுவரையில் சுமார் 3700 ஆப்கான் பிரஜைகளை கனடாவிற்கு அழைத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts