Home உலகம் ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்கியிருக்க விரும்பவில்லை – பைடன்

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்கியிருக்க விரும்பவில்லை – பைடன்

by Jey

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு சரியானதே என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் அங்கிருந்து ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை விமானம் மூலம் மீட்ட படையினருக்கு வர வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிகழ்வை தலிபான்கள் துப்பாக்கி வேட்டுக்களை நடத்தி கொண்டாடி வருகின்றனர்.

2001 ஆம் ஆண்டு 9/11 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் போரை நடத்தியதுடன் தலிபான்களின் ஆட்சியும் அகற்றப்பட்டது.

இருப்பினும் 20 ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் படைகளை விலக்கிக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பைடனின் முடிவு உள்நாட்டிலும் நட்பு நாடுகள் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

related posts