பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் லிபரல் கட்சிக்கான ஆதரவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The Ipsos poll கருத்துக் கணிப்பின் பிரகாரம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் லிபரல் கட்சி முன்னணி வகித்து வந்த நிலையில் முதல் தடவையாக கன்சர்வேட்டிவ் கட்சி முன்னணி வகிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மைய கருத்துக் கணிப்பின் பிரகாரம் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 32 வீதமான ஆதரவும், லிபரல் கட்சிக்கு 31 வீதமான ஆதரவும் கிடைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, என்.டி.பி கட்சிக்கான ஆதரவும் அதிகரித்து செல்வதாகவும் 23 வீதமானவர்கள் ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.