ஒன்றாரியோ மாகாணத்திலும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா அரங்குகள், ரெஸ்டுரன்ட்கள், ஜிம்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு செல்லும் போது இந்த கோவிட் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி முதல் இந்த கடவுச்சீட்டு முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் இந்த சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் முறையை விசேட செயலி ஒன்றின் ஊடாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.