பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட வெண்டுமென மக்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுடன் தொடர்பு பேணும் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக அலுவலகங்களுக்கு திரும்பும் பணியாளர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுடன் பணிகளில் ஈடுபடுவதனையே மக்கள் விரும்புகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.