கொவிட் தடுப்பூசி ஏற்றக் கூடாது என 12 வயது சிறுன் ஒருவனுடைய தந்தை கோரிய நிலையில் அந்த கோரிக்கையை நிராகரித்து தடுப்பூசி ஏற்றிக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கியூபெக்கின் உயர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான வழக்கில் தந்தை தடுப்பூசி ஏற்றக் கூடாது என கோரிய நிலையில் சிறுவனின் தாய் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென கோரியிருந்தார்.
சிறுவன் மற்றும் அவரது தாயின் விருப்பத்திற்கு இணங்க தடுப்பூசி ஏற்றிக் கொள்ள முடியும் என நீதிபதி Aline U.K. Quach தெரிவித்துள்ளார்.
தமது மகன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவருக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் சிறுவனின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது மகன் பாடசாலைக்கு செல்வதாகவும் இதனால் தடுப்பூசி எற்றுவது பொருத்தமானது எனவும் நீதிமன்றில் குறித்த சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.