Home இந்தியா 75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

by Jey

75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை சுற்றுச்சூழல் மானிய அமைச்சர் மெய்யநாதன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் தடை நடைமுறையில் உள்ளது. இத்தடையை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2021 அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக், பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ணவும் பரிமாறவும் பயன்படும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், அலங்காரத்திற்கான தெர்மோகால் பொருட்கள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள் முதலியவை 2020 ஜூலை முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் 60 கிராம் சதுர மீட்டர் அளவிற்கு கீழ் உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் வருகிற நவ.,30 முதலும் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 2022 டிச.,31 முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

related posts