Home உலகம் சுவிஸில் சுகாதார பணியாளர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்கள்

சுவிஸில் சுகாதார பணியாளர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்கள்

by Jey

கொரோனா மக்களை உணர்வுபூர்வமாக பொறுமையின் எல்லைக்கு தள்ளுகிறது. பாசலின் பல்கலைக்கழக மருத்துவமனை ஊழியர்கள் இதை மேலும் மேலும் உணர்கிறார்கள். அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள், சில சமயங்களில் உடல்ரீதியாகத் தாக்கப்படுகிறார்கள்.

பாசல் பல்கலைக்கழக மருத்துவமனை (USB) ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொள்கிறார்கள். இவர்கள் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக வைரஸை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், கலகக்கார உறவினர்கள், கொரோனா நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்டுள்ளவர்கள், சட்டங்களை மதிக்காத பார்வையாளர்கள் ஆகியோரையும் எதிர்கொள்கின்றனர்.

இதுதொடர்பாக விளக்கிய தகவல்தொடர்புத் தலைவர் நிக்கோலஸ் ட்ரெக்ஸ்லர்: “எந்த விதிமுறைகளையும் ஏற்காத மக்களும் இருக்கிறார்கள். முகக்கவசத்தை மறுப்பவர்கள், வருகைக்கான தடையை ஏற்க விரும்பாதவர்கள் அல்லது நேரத்தை மீறுபவர்கள் உள்ளனர் என்று அவர் கூறுகின்றார்.

அவரே சமீபத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களால் human scum”, “all-believer”, “splitter” என்று குறிப்பிடப்படுவதாக சுட்டிக்காட்டினார். மீண்டும் மீண்டும் இதுபோன்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. இதை முழு மருத்துவமனை ஊழியர்களும் “scrap” என்று அழைக்கிறார்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் மோதல்கள் எழுகின்றன. உதாரணமாக சுகாதார நடவடிக்கைகள் காரணமாக நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் சில சமயங்களில் மிகவும் அசட்டையாக இருப்பார்கள், அது அவர்களது பாதுகாப்பை மட்டுமல்ல, ஏனைய அனைவரது பாதுகாப்பையும் பாதிக்கும் என் அவர்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை” என்று SBK சங்கத்தின் தலைவர் டேனியல் சைமன் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கூட நோயாளிகளின் உறவினர்கள் சில நேரங்களில் அழுத்தம் கொடுக்கிறார்கள், உதாரணமாக குறிப்பிட்டதொரு பரிசோதனை அல்லது சிகிச்சையை கோருவதால் சிரமம் ஏற்படுவதாக சைமன் கூறுகிறார். அங்கேயும் முகக்கவசம் அணிய மறுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா மீது சந்தேகம் கொண்டுள்ள நபர்களுடன் சிரமங்களை எதிர்கொள்ளும்போதும், தடுப்பூசி போடப்படாத மக்கள் மீது வைத்தியசாலை ஊழியர்களின் சகிப்புத்தன்மை அதிகமாக உள்ளது என்று சைமன் கூறுகிறார்.

related posts