Home கனடா கனடாவில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 15000 மாக உயர்வடையலாம்

கனடாவில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 15000 மாக உயர்வடையலாம்

by Jey

கனடாவில் நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் ஏண்ணிக்கை பதினைந்தாயிரமாக உயர்வடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடனாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் Theresa Tam  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதமளவில் தற்போதைய தொற்று பரவுகை நிலைமை நீடித்தால் இந்த தொகை 15000 மாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நோய் தொற்று உறுதியாகும் நாளாந்த எண்ணிக்கையானது 3500 ஆக சராசரியாக காணப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றுகை எண்ணிக்கையை சடுதியாக உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசியின் மூலம் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என டொக்டார் திரேசா டெம் தெரிவித்துள்ளார்.

related posts