Home இந்தியா பஞ்சு மீதான வரி ரத்து

பஞ்சு மீதான வரி ரத்து

by Jey

வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் அவர் கூறியதாவது:
நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். தொழில் முனைவோர் மற்றும் நெசாவளர்களின் கோரிக்கையை ஏற்று நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் பஞ்சு மீதான ஒரு சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

related posts