அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் கனேடிய இளம் வீராங்கனை காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளார்.
கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 18 வயதான Leylah Fernandez இவ்வாறு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக டென்னிஸ் தர வரிசையில் 16ம் இடத்தை வகிக்கும் ஜெர்மனியின் Angelique Kerber வீழ்த்தி Leylah Fernandez வெற்றியீட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில் Leylah Fernandez 4-6, 7-6 (5), 6-2 என்ற செற் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
நடப்புச் சாம்பியனான நயோமி ஒசாகாவை வீழ்த்தியே கனேடிய வீராங்கனை பெர்னாண்டஸ் நான்காம் சுற்றில் முன்னேயியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.