கோவிட் தடுப்பூசி ஏற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத ஆசிரியர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள் கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அருகாமையில் உள்ள மருந்தகங்களில் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் கோவிட் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.