துப்பாக்கிகள் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த வேளையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிப் பயன்பாடு குறித்து தமது அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றாரியோ மார்க்கம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிப் பயன்பாடு குறித்த சட்டங்கள் படிப்படியாக கடுமையாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கன்சர்வேட்டிவ் கட்சி துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பிலான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.