நெல்லியடி வதிரி இரும்பு மதவடியில் சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவரை இன்று காலை பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு 2000 ரூபா நிதி உதவி செய்வதாக தகவல் கிடைத்ததால் முதியவரின் வீட்டில் மக்கள் அங்கு படையெடுத்தால் பெரும் கூட்டம் கூடியது. அங்கு குவிந்த பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. யாரும் சமூக இடைவெளி பேணவில்லை.
இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, நெல்லியடி பொலிஸார் விரைந்து செயற்பட்டு, அந்த பகுதியில் குவிந்த மக்களை அகற்றியதுடன், வீட்டு உரிமையாளரை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
வெளிநாட்டிலுள்ள மகன் 2 கோடி ரூபா பணம் அனுப்பியதாகவும், அதனை ஒருவருக்கு 2,000 ரூபா வீதம் விநியோகித்து வருவதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.