Home உலகம் உயிரியல் ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

உயிரியல் ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

by Jey

அடிப்படைவாதிகள் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு வலுவான சந்தர்ப்பம் காணப்படுவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்லேயர் தெரிவித்துள்ளார். அடிப்படைவாதிகள் மேற்குலகிலிருந்து தொலைவில் காணப்பட்டாலும் மேற்கத்திய நாடுகளை அழிப்பதை நோக்காக கொண்டு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படைவாத சிந்தை கொண்ட பயங்கரவாத குழுக்கள் எதிர்காலத்தில் உலகின் மற்றொரு இராச்சியத்தை இலக்கு வைத்து உயிரியல் ஆயுத தாக்குதலை மேற்கொள்ள சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனைய ஆயுதங்களை தவிர்த்து உயிரியல் ஆயுதங்களை அவர்கள் தெரிவு செய்வார்களென பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அல்கொய்தா மற்றும் ஐஎஸ் பயங்கரவாத குழுக்களும் மேம்பட சந்தர்ப்பம் காணப்படுகிறது. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உலகின் பலமிக்க நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுவதற்கு அமெரிக்கா தயக்கம் காட்டுகின்றமையினால் பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்லேயர் தெரிவித்துள்ளார்.

related posts