அல்பர்ட்டா மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றுகையை ஊக்கப்படுத்தும் நோக்கில் லொத்தர் சீட்டிலுப்பில் பயனில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர்களினால் இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு லொத்தர் சீட்டிலுப்பின் மூலம் பரிசில்கள் வழங்கும் நடைமுறையை மாகாண அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தது.
மேலும், தடுப்பூசி ஏற்றுகையை ஊக்கப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வோருக்கு 100 டொலர்களை வழங்குவதாக மாகாண அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
எனினும், இந்த ஊக்குவிப்புக்களின் மூலம் மக்கள் தடுப்பூசி ஏற்றுகையில் உரிய முனைப்பு காட்டவில்லை என மருத்துவர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
ஊக்கப்படுத்துவதுற்கு கொடுப்பனவு வழங்குவதனை காட்டிலும் தடுப்பூசி ஏற்றவாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதனை கட்டுப்படுத்தினால் அதிக பலன்களை எதிர்பார்க்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.