ஒன்றாரியோ மாகாணத்தின் சில பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹால்டன், நயகரா, ப்ளுவோட்டர் உள்ளிட்ட சில பாடசாலை சபைகளுக்கு உள்ளிட்ட பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
றொரன்டோ மாவட்ட பாடசாலை சபை பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளில் நேரில் கற்க விரும்பாத மாணவர்களுக்கு நிகழ்நிலை மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றாரியோ சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.