கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு மீண்டும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லிபரல் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ட்ரூடோ முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் தடுப்பூசி ஏற்றுகைக்கு எதிரானவர்கள் இவ்வாறு பிரச்சாரக் கூட்டங்களில் குழப்பங்கள் விளைவித்து வருகின்றனர்.
எவ்வாறெனினும், இவ்வாறான இடையூறுகளினால் கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் தமது முனைப்புக்களில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒரு சிலர் விஞ்ஞானத்தில் நம்பிக்கை கொள்ளாது இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதனால், கோவிட் தடுப்பு கொள்கைகளை மாற்றப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.