கனேடிய அரசாங்கம் வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக தமது எல்லைகளை திறந்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி குறித்த நடைமுறை இன்றைய தினம் அமுலுக்கு வந்துள்ளது.
அத்தியாவசியமற்ற தேவைகளுக்காகவும் இனி கனடாவிற்குள் பிரவேசிக்க வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
இரண்டாவது தடுப்பூசி மாத்திரை ஏற்றிக் கொண்டு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் கடந்ததன் பின்னர் கனடாவிற்கு பிரவேசிக்க முடியும் எனவும் அவ்வாறு பிரவேசிப்போர் கோவிட் பரிசோதனை அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.