Home கனடா எச்சரிக்கையை மீறி கூட்டங்களில் பங்கேற்பது வேட்பாளர்களின் தீர்மானம்

எச்சரிக்கையை மீறி கூட்டங்களில் பங்கேற்பது வேட்பாளர்களின் தீர்மானம்

by Jey

பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை மீறி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பது வேட்பாளர்களின் தீர்மானமே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேடிய பொலிஸார் வேட்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்குபற்ற வேண்டாம் என பலவந்தப்படுத்த பொலிஸாருக்கு முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் பூர்த்தியாகும் வரையில் காவல்துறையினர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்து அது குறித்த அறிவுறுத்தல்களை வேட்பாளர்களுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவர்களுடன் பொலிஸார் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts