Home கனடா ட்ரூடோ மீது மணல் வீசிய சம்பவம் குறித்து விசாரணை

ட்ரூடோ மீது மணல் வீசிய சம்பவம் குறித்து விசாரணை

by Jey

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீது மணல் கற்கள் வீசித் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒன்றாரியோவின் லண்டன் பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை லிபரல் கட்சியின் வேட்பாளரும், பிரதமருமான ட்ரூடோ பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நோக்கி வீசி எறியப்பட்ட மணகல் கற்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் வீழ்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மணல்கள் வீசி எறியப்பட்டதாகவும் இதனால் தமக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் தடுப்பூசி ஏற்றுகைக்கு எதிர்ப்பு வெளியிடும் தரப்பினர் பல்வேறு இடங்களில் ட்ரூடோவின் கூட்டங்களில் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

related posts