கனேடிய மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளது.
இன்றைய தினம் வட்டி வீதங்கள் தொடர்பிலான புதிய விபரங்களை மத்திய வங்கி வெளியிட உள்ளது.
எவ்வாறெனினும் இன்றைய தினம் வெளியிடப்படும் வட்டி வீதங்களில் மாற்றங்கள் இருக்காது என பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
வட்டி வீதத்தை கனேடிய மத்திய வங்கி தொடர்ந்தும் 0.25 வீதமாக பேணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீத எதிர்வு கூறலை மத்திய வங்கி கடந்த ஜூலை குறைத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்று பொருளாதார நிலைமைகள் போன்ற காரணிகளினால் அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.