ஒன்றாரியோ மாகாணத்தில் டிஜிட்டல் அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த ஆண்டின் இறுதியளவில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆள் அடையாளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை சிறந்த தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டை மிகவும் பாதுகாப்பானதும், நம்பகமானதுமாகும் என மாகாண அரசாங்கம் தெரிவிக்கின்றது.
வங்கி கணக்கு ஒன்றை திறத்தல், மருத்துவரின் சேவையை பெற்றுக் கொள்ளல், தடுப்பூசி ஏற்றுகை குறித்த தகவல்களை பேணுவதற்கு, லொத்தர் சீட்டு கொள்வனவு செய்ய வயதை உறுதிப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்த டிஜிட்டல் அடையாள அட்டை பயன்படுத்தப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.