அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளினால் எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பொருத்தமான பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை அதிகரிப்பார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி கடந்தவாரம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தருவிக்கப்படும் பொருட்களின் டொலர் பெறுமதியை வைப்புச் செய்தால் மட்டுமே அதற்கான கடன் பத்திரத்தைப் பெற முடியும் என்று மத்திய வங்கி அறிவித்தது. பொதுவாக அரச, தனியார் வங்கிகளில், குறுகிய கால கடன்அடிப்படையில், காலம் தாழ்த்தி செலுத்தும் வகையில் கடன் பத்திரம் பெற்று அத்தியவாசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது வழமையாகும்.
இறக்குமதியாளர்கள் கைவசம் டொலர்களை வைத்திருப்பதில்லை என்பதால் திடீரென வந்த அறிவிப்பினால் குறித்த பொருட்களை இறக்குமதி தடைப்படும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களை ஏற்கனவே இறக்குமதி செய்துவைத்துள்ள வர்த்தகர்கள் அவற்றின் விலைகளை அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதில் கைபேசிகள், மின்சாதனங்கள் எவையும் அடங்குகின்றன. அத்துடன், ச்சீஸ், பற்றர், பழங்கள் என அனைத்துப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரை 75 ஆயிரம் முதல் 250,000 வரை விற்கப்பட்ட செல்போன்றகள் 350,000 வரை அதிகரிக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.