Home உலகம் சுவிட்சர்லாந்தில் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்

சுவிட்சர்லாந்தில் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்

by Jey

மத்திய சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் தெருக்களில் சுமார் 1,500 ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர்.

சுவிஸ் தலைநகர் பெர்னில் சுமார் 1,000 பேர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொவிட் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இரவு விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற உட்புற இடங்களுக்கான அணுகலை அனுமதிக்கும் அரசாங்க முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்திய போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

லூசெர்னில் நடந்த பேரணி உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் அது குழப்பங்கள் இன்றி நடந்து முடிந்துள்ளது.

நேற்றைய பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிகமாக நகரின் ஒரு பகுதியில் போக்குவரத்தை நிறுத்தியதோடு, பேரணி குறித்து செய்தி வெளியிட்ட சில பத்திரிகையாளர்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

பேரணியை எதிர்த்த சிலருடனான ஆர்ப்பாட்டக்கார்களின் மோதலை முறியடிக்க மிளகு தெளிப்பைப் பயன்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும், காயங்கள் அல்லது கைதுகள் பற்றிய உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.

related posts