எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார்.
” மேற்படி தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். நிபுணர் குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும் தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகும்.
அத்துடன் விசேட தேவையுடைய மற்றும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை கிடைத்துள்ளது. அடுத்தவாரம் முதல் அதற்கான திட்டம் ஆரம்பமாகும்.” – எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.