Home கனடா இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

by Jey

வைத்தியசாலைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என றொரன்டோ பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பூசி ஏற்றுகைக்கு எதிர்ப்பை வெளியிட்டு மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டங்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம் நடாத்துவதற்கான உரிமைகளை மதிப்பதாகவும் எனினும் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படும் வகையில் அந்தப் போராட்டம் நடத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Canadian Frontline Nurses என்ற அமைப்பு ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் தடுப்பூசி ஏற்றுகையை எதிர்த்து இன்று போராட்டம் நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இவ்வாறான ஓர் சூழ்நிலையில் போராட்டம் நடாத்துவது ஏற்புடைதல்ல என மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர்களோ, நோயாளிகளோ இந்தப் போராட்டத்தில் இலக்கு வைக்கப்படக் கூடாது என ஒன்றாரியோ வைத்தியசாலை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

related posts