தரை வழியாக பாகிஸ்தான் சென்ற ஆப்கான் பிரஜைகள் கனடாவிற்கு அழைத்து வரப்பட உள்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய குடிவரவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுமார் 140 ஆப்கான்கள் தரைவழியாக பாகிஸ்தான் எல்லையை கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாகிஸ்தானை அடைந்தவர்களுக்கு விசேட வீசா வழங்கப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியதனைத் தொடர்ந்து அங்கிருந்து கனேடியர்கள் மற்றும் ஆப்கான் பிரஜைகளை அழைத்து வரும் நடவடிக்கைகளை கனடா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.