பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் தலைமையிலான லிபரல் கட்சிக்கும், எரின் ஓ டுலேவின் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும 20ம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு சம அளவிலான அதாவது 32 வீதமான ஆதரவு காணப்படுவதாக இறுதியாக நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
என்.டி.பி கட்சிக்கான ஆதரவு 20 வீதமாக காணப்படுகின்றது.
ஆரம்பத்தில் லிபரல் கட்சி முன்னணி வகித்து பின்னர் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னணி வகித்த நிலையில் தற்பொழுது இரண்டு கட்சிகளுக்கும் சம அளவிலான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.
இணைய வழி கருத்துக் கணிப்பு என்பதனால் இதன் துல்லியத்தன்மை அதிகளவில் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.