அவுஸ்ரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை அறிவித்துள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மூன்று நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
இந்த கூட்டணியில் அவுஸ்ரேலியாவுக்கு அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட 8 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை அவுஸ்ரேலியா வாங்குவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் பட்சத்தில் அவுஸ்ரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது