கனடா மீதான பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு வந்தது.
அண்மையில் கனடா பயணத்தடையை தளர்த்திய போதிலும், அமெரிக்கா இன்னமும் பயணத் தடையை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.